"நீ எல்லாம் ஒரு ஆளே இல்லை ; தொலைச்சுப்புடுவேன்" மாநகராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியரை மிரட்டும் மற்றொரு ஆசிரியர்

0 3283

கரூரில் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மற்றொரு மாநகராட்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியரை தரக்குறைவாகவும் கொலை மிரட்டல் விடும் தொணியிலும் பேசிய ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது.

மாநகராட்சி ஜெயப்பிரகாஷ் நடுநிலைப் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியரான ராஜலிங்கம் என்பவருக்கும் அதே பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான செல்வம் என்பவருக்கும் நிர்வாக ரீதியில் பிரச்சனை ஏற்பட்டு, மாவட்டக் கல்வி அலுவலரிடம் ராஜலிங்கம் புகாரளித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த செல்வத்தின் ஆதரவாளரும் மாநகராட்சி உமையாள் பள்ளி ஆசிரியருமான விஜயகுமார் என்பவர் ராஜலிங்கத்தை போனில் அழைத்து, ஆபாசமாகவும் கொலை மிரட்டல் விடுக்கும் தொணியிலும் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments